Posts

Showing posts from June, 2020

World Brain Tumor Day :உலக மூளை கட்டி நாள்

Image
உலக மூளைக்கட்டி தினம்  ஜூன் 8 . மூளைகட்டி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டு முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினம் உலக ப்ரெய்ன் டியூமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மூளையில் உருவாகும் கட்டியானது புற்றுநோயாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை. அவை புற்று அல்லாத கட்டிகளாகவும் இருக்கலாம் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.மூளை புற்றுநோய் உண்டாவது அரிது என்பதோடு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதும் கடினமானதே என்பதால் கட்டிகள் எந்தவகை என்பதை முதலில் கவனித்து சிகிச்சை பெறுவது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து தெரிந்துகொள்வோம். மூளையில் கட்டி மூளையில் இருக்கும் உயிரணுக்களின் வளர்ச்சி அசாதாரணமாவதையே இது குறிக்கிறது. இந்த உயிரனுக்களின் தடையற்ற வளர்ச்சியால் மூளையில் கட்டிகள் உண்டாகிறது. இந்த கட்டிகள் எல்லாமே புற்றுநோயாக மாறுவது கிடையாது. புற்றுநோய் அல்லாத கட்டிகள் தீங்கற்றவை. இவை மிக மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. சிகிச்சை பிறகும் இவை அரிதாக மீண்டும் வரக்கூடும். அடுத்தது புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகள். இவை தீங்கு செய...